உங்கள் மேடைப்பேச்சு - Your Public Speech



After a great speech, you feel to be on top of the world.!

People fear the most to speak before a crowd. Many avoid public speaking opportunity due to fear of content and flow of speech. Our job is to provide a simple yet powerful content to make you a SuperStar. 


Speaking before a group of people gives you a greater advantage of influencing people, building a brand and to boost your image. Never miss such a wonderful opportunity. We are there to help you preparing a stunning speech. Just give us 24 hours time.


Perfect speech must move the audience to be on cloud nine. You can do it with a perfect introduction, rhythmic words, stunning information and a powerful short story. Depending on the occasion, we prepare your speech as the most appropriate. Just give us 24 hours of time.


Contact us Now..! to know the process of engaging us, click here ->  WriteForMe



A sample speech we prepared:

வியக்கவைக்கும் தமிழன்

 

அனைவருக்கும் இனிக்கும் தமிழால் வணக்கம். தமிழ் சங்கமத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வருக வருகவென வரவேற்கிறேன். தமிழின் பெருமையையும், தமிழரின் பெருமையையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் ஒரு தமிழனாக எனக்கு பெருமையே.

 

தமிழின் தொன்மையையும், தமிழனின் பெருமைகளையும் பல நூற்றாண்டுகளாய், சிறிது சிறிதாக சிதைத்த பின்பும், எஞ்சி நிற்பதே ஏராளம் என்றால், மொத்தம் எத்தனையோ.

 

தனிக்குடித்தனம் சென்ற தமிழ்த்தாயின் பிள்ளைகள்தான் தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் என்பதை அறியும்போது ஆனந்தம் அடைகிறேன்.

 

தமிழின் ‘அட்டம்’, சமஸ்கிருதத்தில் ‘அஷ்ட்டம் ஆகி, இந்தியில் ‘ஆட் ஆகி, ஆங்கிலத்தில் ‘எய்ட் ஆகி, ஆப்கானில் ‘ஆக்ட் ஆகி, அரேபியத்தில் ‘டேடு ஆகி, போர்ச்சுகீசில் ‘ஓயிட்டு ஆகி, இத்தாலியில் ‘ஓட் ஆகி, டச்சுவில் ‘ஆஹ்த் ஆகி, லத்தீனில் ‘ஆக்டோ’ ஆகி, தமிழின் தொன்மையையும், தமிழனின் பரந்து விரிந்த தொடர்புகளையும் அறிந்து வியக்கிறேன்.

 

கட்டுக்கடங்கா காவிரியின் இடையில் ‘கல்லணை’ கட்டிய பொறியியல் வல்லமையைக் கண்டு வியக்கிறேன்.

 

மாமல்லபுரத்தின் கல்லினால் உண்டான காவியத்தையும், அரும்பெரும் ஆக்கமான பெருவுடையார் கோவிலின் உருவமும், நெல்லையப்பர் கோவிலின் கல்தூணின் நுட்பமும் கண்டு, மலைக்கிறேன்.

 

இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்த ஒரு நூலை, தாமாகவே ஈர்க்கப்பட்டு,  37 மொழிகள் தழுவிக்கொண்டது என்றால் அது ‘திருக்குறள்’ மட்டுமே என்பதைக் கண்டு வாயடைத்துப் போகிறேன்.

 

மண்ணியல் தொட்டு, வானியல் வரைக்கும், பண்டைய தமிழரின் படைப்புகளைக் கண்டு, எப்படிப்பட்ட ஒரு மரபின் வழி நான் என்று புல்லரிக்க திகைக்கிறேன்.

 

இப்படி ஆச்சரியத்தில் ஆழ்ந்து இருக்கையில், கடற்பரப்பை எப்படி தமிழன் கட்டுக்குள் வைத்து இருந்தான் என்பதையும் அறிந்து எனக்கு வியப்பின் அளவு விண்ணைத் தொடுகிறது. இன்றைய ஆஸ்திரேலியா வரை தமிழன் வாழ்ந்துள்ளான் என்பதற்கு அங்குள்ள பழங்குடியினரே சாட்சி. டிராக்மிலா எனும் ஆஸ்திரேலிய பழங்குடியினர் மொழியில் ஏராளமான தமிழ் சொற்கள் இன்றும் வழக்கில் உள்ளன. அங்கு ஊரு என்ற ஒரு இடமும் உள்ளது.

 

தற்கால தமிழரின் சாதனைகள் சற்றும் சளைத்தது அல்ல. ஜெய் ஹிந்த்எனும் வாசகத்தை உண்டாக்கிய சுதந்திரப் போராட்ட வீரர் செண்பகராமன் பிள்ளை ஒரு தமிழர், கணிதமேதை இராமானுசன் ஒரு தமிழர், தைரொகேர் நிறுவனர் வேலுமணி ஒரு தமிழர், ப்ளூம்  என்ற அதிசய மின் ஆக்கியை கண்டுபிடித்த ஶ்ரீதர் ஒரு தமிழர். கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை ஒரு தமிழர், பெப்சி நிறுவன முன்னாள் தலைவர் இந்திரா நூயி ஒரு தமிழர். மின்னஞ்சலைக் கண்டுபிடித்த சிவா அய்யாத்துரை ஒரு தமிழர், HCL நிறுவனர் சிவ நாடார் ஒரு தமிழர், இந்திய இளைஞர்களின் இதய நாயகன் டாக்டர். அப்துல் கலாம் ஒரு தமிழர்.

 

இயல், இசை, நாடகம், விவசாயம், மருத்துவம், கணிதம், விண்ணியல், கட்டிடக்கலை,  போன்ற அனைத்து துறைகளிலும் நெடுங்காலமாய் கோலோச்சும் தமிழினம் போன்றதொரு நீண்ட நெடிய வரலாறுடைய இனம் உலகில் எங்கும் இல்லை. இங்கே நான் குறிப்பிட்ட சாதனையாளர்கள் என்னளவு என்றால், விடுபட்டவர்களின் எண்ணிக்கை விண்ணளவு. அனைத்தையும் சொல்லி முடிப்பதற்கு இந்த ஒரு ஆயுள் போதாது.

 

இனியது இயம்பினோம்-மக்கள்

இடர்களை இளக்கினோம்

துணிவது புகட்டினோம்-வீரக்

கேணியாய்த் திகட்டினோம்

பணிவது இகழ்ந்தோம்-அறிவு

பகலவனாய் திகழ்ந்தோம்.

 

நன்கிது தீதிது நவின்றோம்

பன்களால் புண்கள் ஆற்றினோம்

உலகையே தேற்றினோம்.

 

அறிவது ஆக்கி அடிமையைப் போக்கி

மடமையை நீக்கி நெஞ்சுரம் ஊக்கி

சாதிகள் ஒழித்து சமத்துவம் படைத்து

உறுதியை ஊட்டி உவண்டவர் தேற்றி

சுதந்திரம் காட்டி சுடர்தனைக் கூட்டி

கடலினில் கரையினில்

கருத்தினில் கவியினில்

தமிழர்தம் மானத்தில்

தமிழ்ப் பாடலில் தர்மத்தேடலில்

கலைக்கூடலில் கலந்தாடலில்

மருந்தென மறையாத மாணிக்கங்களே

தமிழ்ச் சொந்தங்களே..!

 

“வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்” என்று வாய்ப்புக்கு நன்றிகூறி விடைபெறுகிறேன். நன்றி.. வணக்கம்.